தமிழகத்தில் திருக்கோயிலூரில் நேற்று அதிகபட்சமாக 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் உட்புற பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளில் நேற்று ஆங்காங்கே மழை பெய்துள்ளது. திருக்கோயிலூரில் அதிகபட்சமாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம், திருமயம், போளூர், திருவண்ணாமலை, குன்னூர், நடுவட்டம், கொடைக்கானல், செய்யூர், வானூர், திண்டிவனம், கரம்பகுடி, கீரனூர், பெருங்களூர், புதுக்கோட்டை, பென்னாகரம், மேலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.