''ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்'' என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
திருப்பூர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் முதல் எதிரி நாடு சீனா. கைலாய மலை சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு செல்ல வரி கட்ட வேண்டியுள்ளது. கைலாய மலையை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து விட்டது. கோவையில் மட்டும் வங்கதேசத்தினர் 25,000 பேர் ஊடுருவி உள்ளனர்.
கடலூரில் நடந்த தி.மு.க மகளிர் மாநாட்டில் இந்து மதத்தை பற்றி இழிவாகப் பேசிய கனிமொழியை கண்டிக்கிறோம். இந்து மதம் வேறு, சமுதாயம் வேறு. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமகோபாலன் கூறினார்.