சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது.
அக்னி வெயில் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வெயிலின் தாக்கம் குறையாததால் அவதிப்பட்டு வந்த மக்கள், இம்மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெய்த இம்மழையினால் தியாகராய நகர், கோடம்பாக்கம், பொன்னேரி, புழல், அம்பத்தூர் உள்படப் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடியது.
சூளைமேடு அஞ்சல் நிலையம் அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வாகனங்களின் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.