Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌ம் அமை‌‌தி‌யி‌ன் தொ‌ட்டிலாக ‌‌‌தி‌க‌ழ்‌கிறது: கருணா‌நி‌தி!

த‌மிழக‌ம் அமை‌‌தி‌யி‌ன் தொ‌ட்டிலாக ‌‌‌தி‌க‌ழ்‌கிறது: கருணா‌நி‌தி!
, வியாழன், 19 ஜூன் 2008 (15:32 IST)
'தமி‌ழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திக‌ழ்கிறது'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னதலைமைசசெயலக‌த்‌தி‌லநட‌ந்மாவ‌ட்ஆ‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ள், காவ‌ல்துறஅ‌‌திகா‌ரிக‌ளமாநா‌ட்டி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், த‌மிழஅரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் சிலவற்றை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு சில மாநிலங்கள் செயல்படுத்தி வருவதஅ‌றியலா‌ம். குறிப்பாக ஒரு கிலோ அரிசி 2 ரூபாக்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு அண்மையில் தொடங்கியிருக்கிறது.

தமி‌ழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திக‌ழ்கிறது என அனைவரும் பாராட்டுகின்றனர். இப்பாராட்டு மேலும் பொலிவுபெற வேண்டுமெனில், கடுங்குற்றம் புரிவோர், கூலிப்படையாகிக் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர், பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோரின் போக்கிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட காவல் துறையினர் காலதாமதமின்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

மாநிலத்தில் நிலவும் பொது அமைதியைக் குலைத்திடும் தீய நோக்கத்துடன் சில சமூக விரோதிகள், நாடு போற்றும் தலைவர்களின் சிலைகளை அவ்வப்போது சேதப்படுத்தியும் சிதைத்தும் தேவையற்ற சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்குவ‌ர்க‌ளமீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீ‌நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களைத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்துகளைக் குறைக்கவும், விபத்துகள் நேராவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தடுத்திடச் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொதுமக்களை‌ அலைக்கழி‌க்கூடாது. கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களி‌காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் ஈடுபடவே கூடாது.

வகுப்புவாதமும் சாதிய உணர்வும் தமி‌ழக‌ மண்ணிலிருந்து வேரோடு ஒழிக்கப்படவேண்டும். பிரச்சினை ஏற்படும் போது தொடர்புடைய அனைவரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது, நல்லிணக்கத்தை நிரந்தரமாக உருவாக்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம், போதிய கல்வித்தகுதியின்மை ஆகிய காரணங்களால், தடுமாறும் இளைஞர்களையும், பழங்குடி மக்களையும் குறி வைத்து மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமி‌ழ்நா‌ட்டி‌லவேரூன்ற வைத்து அமைதியைக் குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம் கொடுத்திடாமல், காவல்துறை இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும் எ‌ன்றமுத‌ல்‌வ‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil