Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் வேலைக்கு சிபாரிசு‌க்கு அலையா‌‌தீ‌ர்க‌ள்: தேர்வு வாரியம்!

ஆசிரியர் வேலைக்கு சிபாரிசு‌க்கு அலையா‌‌தீ‌ர்க‌ள்: தேர்வு வாரியம்!
, வியாழன், 19 ஜூன் 2008 (13:18 IST)
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுகிறது. வேறு நபர்கள் யாரேனும் தாங்கள் சிபாரிசு செய்து ஆசிரியர் வேலை பெற்றுத்தடுகிறோம் என்று கூறினால் ஏமாற வேண்டாம் எ‌ன்று த‌மி‌‌ழ்நாடு தே‌ர்வு வா‌ரிய‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள அரசு பொறுப்பேற்றவுடன் ஆசிரியர் நியமனங்களை வேலை வாய்ப்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்வது என்று முடிவு எடுத்து அதன் அடிப்படையிலேயே ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது.

அவ்வாறு தெரிவு செய்யும்போது வேலை வாய்ப்பகத்தில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 1:1 என்ற விகிதாச்சாரத்தில் பணி நாடுனர்களின் பட்டியல் பெறப்பட்டது. இவ்வாறு பெறப்படும் போது 50 ‌விழு‌க்காடு பணி நாடுனர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வருகை அளிக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் உரிய காலத்தில் அனைத்து ஆசிரியர் பணி இடங்களையும் பூர்த்தி செய்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இந்த கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் வேலை வாய்ப்பகத்தில் பணி நாடுனர் பட்டியல் 1:5 என பெறப்பட்டு சான்றிதழ் சரி பார்த்தல் பணி நடைபெறுகிறது. 1:5 விகிதத்தில் பட்டியல் பெறப்பட்டாலும் பணி நியமனம் முற்றிலும் வேலை வாய்ப்பாக பதிவு மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பதிவு மூப்பின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1621 நபர்களும், பட்டதாரி ஆசிரியர்கள் 3107 நபர்களும், தமிழாசிரியர்கள் 360 நபர்களும், இதர ஆசிரி யர்கள் 1313 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுகிறது. வேறு நபர்கள் யாரேனும் தாங்கள் சிபாரிசு செய்து ஆசிரியர் வேலை பெற்றுத்தடுகிறோம் என்று கூறினால் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil