உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனிலிருந்து இன்று காலை சென்னை திரும்பினார்.
கடந்த மாதம் 4ஆம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார்.
இதனால் கடலூரில் கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் நடந்த தி.மு.க. மகளிர் அணி மாநாட்டிலும், சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. உயர் நிலை குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
நேற்று நடந்த தி.மு.க. உயர்நிலை குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. நீக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.