தி.மு.க. - பா.ம.க. இடையில் கருத்து வேறுபாடிருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்க அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் முயற்சி எடுத்தார். அவரது நல்லெண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயலாற்ற வேண்டும். கூட்டணி தர்மத்தை புரிந்துகொண்டு நாட்டின் நலன் கருதி அனைவரும் செயல்பட வேண்டும்.
மதவாத சக்திகளுக்கு இடம்கொடுக்காமல் அவற்றை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதில் கருத்து வேறுபாடு ஏதாவது இருந்தால் பேசித் தீர்த்தக்கொள்ள வேண்டும்" என்றார்.