Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தி வனப்பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த கரடி!

ஈரோடு வேலு‌ச்சா‌மி

சத்தி வனப்பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த கரடி!
, செவ்வாய், 17 ஜூன் 2008 (15:48 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமத்தில் இரண்டு கரடிக‌ள் குட்டியுடன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலைமலை செல்லும் வழியில் உள்ளது காளிதிம்பம். இங்கு 45 வீடுகள் மட்டுமே உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியின் இடையே அமைந்துள்ள கிராமம் ஆகும்.

இந்த கிராமத்திற்கு செல்ல பொதுமக்கள் தலமலை ரோட்டில் இருந்து இரண்டு கி.மீ., ூரம் வனப்பகுதியில் நடந்துசெல்ல வேண்டும். சம்பவத்தன்று இந்த கிராமத்தை சேர்ந்த பாலன் (43), ராமன் (37) உள்ளிட்டோர் பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து இறங்கி தங்கள் கிராமத்திற்கு வனப்பகுதிக்குள் நடந்து சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது இவர்களுக்கு பின்னால் உறும‌ல் சத்தம் கேட்டது. உடனே இவர்கள் திரும்பி பாத்தபோது சுமார் ஐம்பதடி ூரத்தில் இரண்டு கரடிகள் ஒரு குட்டியுடன் நடந்து வந்துகொண்டிருந்தது. இதை பார்த்தவுடன் இவர்கள் பயந்து வேகமாக காளிதிம்பத்திற்கு ஓடிவிட்டனர். உடனே கிராம மக்களிடம் இது குறித்து கூறினர்.

அனைவரும் வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்து தாங்களும் வீட்டிற்குள் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் காளிதிம்பம் கிராமத்திற்குள் வந்த கரடிகள் மூன்றும் அங்குள்ள மண் புற்றை தோண்டிவிட்டு தெற்கு நோக்கி காட்டுக்குள் சென்றுவிட்டது. இதன்பின்தான் இக்கிராம மக்களுக்கு நிம்மதி பிறந்தது.

Share this Story:

Follow Webdunia tamil