பெரம்பலூர் அருகே நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவர்கள், பொது மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஒகலூர் கிராத்தில் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 450 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக மாற்றக் கோரி மாவட்ட கல்வித்துறையிடம் அந்த பகுதிகள் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் ஒகலூர் நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அப்போது அவர்கள், முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு இந்த பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.