கரூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவன்- மனைவி நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மைலப்பன் (58), இவரது மனைவி சொர்ணகுமாரி (50) ஆகியோர் கார் ஒன்றில் இன்று காலை கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
கார் ரங்கமலை என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மைலப்பன், அவரது மனைவி சொர்ணகுமாரி ஆகியோர் நிகழ்விடத்திலேய பலியானார்கள்.
அவர்களது உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பல்லப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.