நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களின் அபிமான இணைய பல்கலைத் தளமான தமிழ்.வெப்துனியா.காம், இன்று பிற்பகல் முதல் புதிய முகப்பு பக்க வடிவமைப்புடன் வெளிவரப்போகிறது.
கடந்த ஆண்டு யுனிகோடிற்கு மாறியபோது வெப்உலகம்.காம் என்பதிலிருந்து தமிழ்.வெப்துனியா.காம் என்ற புதிய இணையத் தள முகவரிக்கு மாறிய எமது இணைய பல்கலைத் தளம், இப்பொழுது, பயனர்கள் மிகச் சுலபமாக அனைத்து பொருளடக்கத்தையும் முகப்புப் பக்கத்திலிருந்தே காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எமது பல்கலைத் தளத்தின் பயனாளர்களாகிய தாங்கள் கடந்த ஓராண்டுக் காலத்தில் எமக்கு அளித்த பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் இன்று பிற்பகல் 3.00 மணிக்குப் பிறகு காணப்போகும் புதிய முகப்புப் பக்க வடிவமைப்பு குறித்து உங்களின் கருத்துக்களை எங்களுக்கு எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.