உசிலம்பட்டி அருகே காரும் டிராக்டர் டிரெய்லரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வேலமாலப்பட்டி என்ற கிராமத்தில் புத்தகங்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் டிரெய்லர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மீது டிராக்டர் டிரெய்லர் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.