Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் ஜூ‌ன் 17ஆ‌ம் மதுரை வருகை!

எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் ஜூ‌ன் 17ஆ‌ம் மதுரை வருகை!
, சனி, 14 ஜூன் 2008 (13:35 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து எ‌ய்‌ட்‌ஸ் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ர‌யி‌ல் கட‌ந்த மாத‌ம் த‌மிழக‌ம் வ‌ந்தது. வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி மதுரை வரு‌ம் ர‌யி‌ல் இரண‌்டு நா‌‌ட்க‌ள் அ‌ங்கு ‌நி‌ன்று செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌‌‌ற்கு ர‌யி‌‌ல்வே தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக `ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்' என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆ‌மதேதி டெல்லியில் சோ‌னியாக‌ா‌ந்‌தியா‌ல் தொடங்கி வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆ‌மதேதி வரை ஓராண்டு காலம் 180 முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை இந்த ரயில் நின்று செல்லும். மொத்தம் 9,000 கி.மீ பயணம் செய்து 50,000 கிராமங்களில் சுமார் 1 கோடி பேரிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும்.

இந்த ரயில் 7 பெ‌ட்டிகளுட‌ன் கட‌ந்த மாத‌ம் 27ஆ‌மதே‌‌தி வேலூர்-காட்பாடி ரயில் நிலையத்திற்கு வ‌ந்தது. முத‌ல் க‌ட்டமாக ஜூலை 26 ஆ‌‌ம் தே‌தி அர‌க்கோண‌ம், செ‌ன்னை, ‌விழு‌ப்புர‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, புது‌ச்சே‌ரி, ‌விரு‌த்தாசல‌ம், ‌திரு‌ச்‌சி, கரூ‌ர், ‌தி‌ண்டு‌க்க‌ல், மதுரை, தூ‌த்து‌க்குடி, ‌‌திருநெ‌ல்வே‌லி, நாக‌ர்கோ‌வி‌ல், க‌ன்‌னியாகும‌ரி ஆ‌கிய இட‌ங்களு‌க்கு செ‌ல்‌கிறது.

இர‌ண்டா‌ம் க‌ட்டமாக க‌ட்டமாக ஆக‌‌ஸ்‌ட் 12ஆ‌ம் தே‌தி கோய‌ம்பு‌த்தூ‌ர் வரு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ர‌யி‌ல், ‌பி‌ன்ன‌ர் ஈரோடு, சேல‌ம் செ‌ல்‌கிறது. ஆக‌ஸ்‌ட் 18ஆ‌ம் தே‌தி ஜோலா‌ர்பே‌ட்டை செ‌ல்‌கிறது எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil