மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி (திருப்பூர்) அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் பதவியிலிருந்தும், மாநிலக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சட்டமன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய தலைவராக திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதியும், துணைத் தலைவராக மதுரை மேற்கு எம்.எல்.ஏ. நன்மாறனும், கொறடாவாக பெரம்பூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.மகேந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
முன்னதாக சட்டமன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக கோவிந்தசாமியும், துணைத் தலைவராக நன்மாறனும், கொறடாவாக பாலபாரதியும் இருந்து வந்தனர்.