Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண வீக்கத்தால் நாடு தள்ளாடுகிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!

பண வீக்கத்தால் நாடு தள்ளாடுகிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!
, வியாழன், 12 ஜூன் 2008 (15:48 IST)
''வரலாறு காணாத பணவீக்கத்தால் நமது நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், பங்கேற்கும் குறிப்புகள் மூலமாக முதலீடு செய்யும் அய‌ல்நாட்டு முதலீட்டாளர்களின் பெயர் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், அதன் விளைவாக அய‌ல்நாட்டில் இருந்து நமது நாட்டிற்கு வரும் பணம் உண்மையிலேயே சட்ட வரம்பிற்கு உட்பட்டதா என்பது குறித்து தெரியாத நிலை இருக்கிறது என்றும் நான் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தேன். எ‌ன்னுடைய ‌நியாயமான குற்றச்சாட்டை மத்திய நிதி அமைச்சர் உதாசீனப்படுத்தி இருந்தார்.

கோல்டுமேன் சாக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் செபி அமைப்பால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தத் தேவையில்லை என்று கூறியது மட்டும் அல்லாமல், செபி அமைப்பு மேற்படி நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செபி அமைப்பின் முகத்தில் கரி பூசப்பட்டதோடு மட்டும் அல்லாமல், அய‌ல் நாட்டில் இருந்து வரும் முதலீடுகள் எல்லாம் கண்காணிக்கப்படுகிறது என்று சொல்லும் மத்திய நிதி அமைச்சரின் கூற்று பொய் என்றும் தெளிவாகிறது.

தற்போது நிதி அமைச்சரின் பொய் அம்பலமாகி உள்ளதால், அவர் தனது பதவியை விட்டு விலகுவாரா? பிரதமர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. இது குறித்து புலன் விசாரணை செய்யச் சொல்வாரா?

அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை விட அய‌ல்நாடு, உள்நாடு மற்றும் பொருளாதாரம் உள்ளடக்கிய இந்தியாவின் பாதுகாப்புதான் மிக முக்கியமாகும். வரலாறு காணாத பணவீக்கத்தால் நமது நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீரான வளர்ச்சியின்மையினால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்.

பங்குச் சந்தை கீழே விழுந்து இருக்கிறது. பயங்கரவாதம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அய‌ல்நாட்டில் இருந்து, தேச விரோத அமைப்புகளுக்கான நிதி வருகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. நேர்மையானவர்களும், தேசப்பற்றுள்ள அனைத்து குடிமக்களும் இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil