திருச்சி அருகே எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனது. இதனால் எண்ணெய்கள் கொட்டி வீணானது.
திருச்சியில் இருந்து மதுரைக்கு இன்று எண்ணெய்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. சமுத்திரம்- மணப்பாறை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது நான்கு பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தது. இதில் பெட்டியில் இருந்த எண்ணெய் தரையில் கொட்டி வீணானது.
தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து எண்ணெய்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் சென்னை- குருவாயூர் விரைவு ரயில், சென்னை விரைவு ரயில் மற்றும் மதுரை- மயிலாடுதுறை பயணிகள் ரயில் சிறிது நேரம் தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.