திருச்சி மாவட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தீவிர வேட்டையில் 55 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மத்திய பகுதி காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் கரன் சிங்கா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 160 சரவன் நகைகள், 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த கரன் சிங்கா, கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலையங்களில் பதிவான 116 திருட்டு வழக்குகளில் 105 வழக்குகளில் தனிப்படை காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடித்துள்ளனர் என்று கூறினார் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் கரன்சிங்கா.