Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடு‌த்த மாத‌ம் 4,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்!

அடு‌த்த மாத‌ம் 4,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்!
, செவ்வாய், 10 ஜூன் 2008 (10:04 IST)
அரசு பள்ளிகளில் அ‌டு‌த்த மாதத்திற்குள் 4,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தொடக்கக்கல்வி இயக்குனர் தேவராஜன் கூ‌றினா‌ர்.

தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து அந்த பொறுப்பை அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.) திட்ட இயக்குனர் எம்.பி.விஜயகுமார் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வந்த தேவராஜன் தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் எஸ்.எஸ்.ஏ. திட்ட இயக்குனர் எம்.பி. விஜயகுமார் தொடக்க கல்வி இயக்குனர் பொறுப்பை ஒப்படைத்தார்.

அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ூலை மாதத்திற்குள் 4,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எந்தெந்த பள்ளிகளில் எத்தனை காலி இடங்கள் உள்ளன? என்ற பட்டியல் கிடைக்க பெற்றதும், இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குனர் தேவராஜன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil