Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.எட். பட்ட படிப்பு‌க்கு 18ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!

பி.எட். பட்ட படிப்பு‌க்கு 18ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!
, திங்கள், 9 ஜூன் 2008 (13:39 IST)
அரசு ஒது‌க்‌கீ‌ட்டு இட‌ங்களு‌க்கு ‌பி.எ‌ட். ப‌ட்ட படி‌ப்பு மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌க்கான ‌வி‌‌ண்ண‌ப்ப‌ம் ஜூ‌ன் 18ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌கிறது.

2008-2009 ஆம் கல்வியாண்டில், இரு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் நடை பெறவுள்ளது.

விண்ணப்பத்தின் விலை ரூ.300. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனம் சார்ந்த மாணவர்கள், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்று கையொப்பம் இடப்பெற்ற சாதி சான்றிதழின் நகலை அளித்து ரூ.175 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத் தொகையைப் பணமாக அல்லது The Secretary Tamil Nadu B.Ed., Admissions. Chennai-5 என்ற பெயரில் (சென்னையில் காசாக்கும் வண்ணம்) நாட்டுடைமையாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட, கேட்பு வரைவோலையாக செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 18ஆ‌மதேதி முதல் ஜூலை 5ஆ‌மதேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை எல்லா வேலை நாட்களிலும் கீழ்க்கண்ட 21 கல்வியியல் கல்லூரிகளில் மட்டும் வழங்கப்படும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்: கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை. விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், திருவல்லிகேணி. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம். அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு, அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை. அரசு கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர். அரசு கல்வியியல் கல்லூரி, காந்திநகர், வேலூர். அன்னாம்மாள் கல்வியியல் மகளிர் கல்லூரி, திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி.

லட்சுமி கல்வியியல் கல்லூரி அம்பாத்துறை (ஆர்.எஸ்), காந்தி கிராம். மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை. என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, ஆத்தூர், திருவட்டாறு. என்.கே.டி. தேசிய கல்வியியல் மகளிர் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை. ஸ்ரீ ஆர்.கே. எம்.வி. கல்வியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா வித்யாலயா அஞ்சல், கோயமுத்தூர். செயின்ட் சேவியர்ஸ் கல்வி யியல் கல்லூரி, பாளையங்கோட்டை. ஸ்டெல்லா மாட்டிடியூனா கல்வியியல் கல்லூரி, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை.

செயின்ட் கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, வேப்பேரி, சென்னை. ஸ்ரீசாராதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ், சேலம். செயின்ட் ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி, 161-எ, காமராசர் சாலை, மதுரை. செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை. தியாக ராசர் ப்ரிசெப்டார் கல்லூரி, மதுரை. வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கும்.

இளநிலை பட்டதாரிகள் இதர வகுப்பு (ஓ.சி.) 50 ‌விழு‌க்காடு மதிப்பெண்ணும், பிற்பட்ட வகுப்பு 45 ‌விழு‌க்காடும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 43 ‌விழு‌க்காடு‌ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பு 40 ‌விழு‌க்காடு மதிப்பெண்ணும் பெற்று இருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர், கண்பார்வை அற்றவர் பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 5ஆ‌ம் தே‌திக்குள் கிடைக்கும்படி செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை, லிவிஸ்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராசர் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு மட்டும் அனுப்ப வேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil