தமிழ்நாட்டின் வட பகுதியான வேலூர் மாவட்டத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது!
நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் இந்த மித நிலடுக்கம் உணரப்பட்டதாகவும், இது 3.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம், வேலூரில் உள்ள சத்துவாச்சேரி, ஓட்டேரி, சேன்பாக்கம், கோட்டை பகுதிகளிலும், வேலூரை அடுத்த வாணிம்பாடி, ஆரணி பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வு சுமார் 5 விநாடிகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.