Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவை பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Advertiesment
புதுவை பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
, சனி, 7 ஜூன் 2008 (11:12 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் நட‌த்தும் முழு கடை அடைப்புப் போராட்டத்தினால் புதுச்சேரியில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் ஓடவில்லை, அரசு பேருந்துகள் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இயக்கபட்டு வருகின்றன. ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரிய மார்க்கெட், உழவர் சந்தை போன்றவைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

உணவு விடுதிகள் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை இங்கிருந்து சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்து மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil