ஆண் வாரிசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதியோர் ஓய்வூதியம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வந்ததை, தி.மு.க. அரசு பொறுப்பெற்ற பிறகு 1.8.2006 முதல் ரூ.400 ஆக உயர்த்தியது.
ஆண் வாரிசு இருந்தால் ஓய்வூதியத் தொகையினைப் பெறுவதற்குத் தகுதியில்லை என்ற நிலையை மாற்றி, ஆண் வாரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஓய்வூதியத் தொகையினைப் பெறலாம் என்று முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.