செஞ்சியில் உள்ள மேல்மலையனூர் கோயிலில் பக்தர்கள் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அமாவாசை திருவிழாவில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்து அறநிலைய துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 5 பேருக்கு மட்டும் தலா ரூ,5 ஆயிரம் உதவி தொகையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
பின்னர் உயிர் இழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர்கள் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.