நீலகிரியில் மலைச்சரிவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் அதில் பயணித்த 8 பேர் பலியானதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஊட்டி- கல்லட்டி மலைப்பாதையில் 36 ஆவது கொண்ட ஊசி வளைவு அருகில் இவ்விபத்து நேரிட்டதாகவும், இதில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 8 பலியானதாகவும் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்களான பேருந்தில் 65 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிகிறது.