Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்
, புதன், 4 ஜூன் 2008 (10:28 IST)
ராமேசுவரம்: ராமேசுவரம் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் ஒருவர் பலியானதையடுத்து அங்கு காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் துவங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும் காவல்துறை மற்றும் மீன் துறை அதிகாரிகள் மீனவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் இலங்கை கடற்படையினரை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

"கடந்த 45 நாள் தடைக்குப் பின்னர் இப்போது கடலுக்கு சென்றுள்ளோம். அதிக வருவாய் கிடைக்கின்ற நேரத்தில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்று மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil