Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மீனவ‌ர் சு‌ட்டு‌க்கொலை : ‌பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!

‌மீனவ‌ர் சு‌ட்டு‌க்கொலை : ‌பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!
, செவ்வாய், 3 ஜூன் 2008 (16:44 IST)
த‌மிழக ‌மீனவ‌ர்களை கா‌ப்ப‌ற்ற மத்‌திய அரசு தவ‌றி‌வி‌ட்டது எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்!

இதுகு‌றி‌த்து ‌பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு வைகோ எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல்,

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதும் கொலை செய்வதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. இந்த மோசமான பிரச்சினையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஜுன் 2 ஆம் தேதி ராமே‌ஸ்வரம் மீனவர் சந்தியாகு இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க அனைத்து உரிமைகளும் உண்டு. தமிழக மீனவர்களை காப்பாற்றும் கடமையில் இருந்து இந்திய அரசு தவறிவிட்டது என்பதை மன வேதனையோடு குறிப்பிடுகிறேன்.

தாங்கள் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய கடற்படையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ தனது கடித‌த்‌தி‌ல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil