ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய் விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழை, மஞ்சள், எள், ஆமணக்கு மற்றும் தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் இடைதரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இங்கு நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய்கள் ஏலம் முறையில் விற்பனையானது. தேங்காய் ஒன்று ரூ.3 முதல் ஏழு வரை விற்பனையானது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரம் தேங்காய்க்கு மேல் தற்போது விற்பனையாகியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.