Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலையை உய‌ர்‌த்த‌க் கூடாது: சர‌த்குமா‌ர்!

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலையை உய‌ர்‌த்த‌க் கூடாது: சர‌த்குமா‌ர்!
, ஞாயிறு, 1 ஜூன் 2008 (11:43 IST)
க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை உய‌ர்‌வினா‌ல் பெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் இழ‌ப்பை‌ ஈடுக‌ட்டுவத‌ற்கு மா‌ற்று வ‌ழிகளை ஆலோ‌சி‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல் ‌விலைகளை உய‌ர்‌த்து‌ம் முடிவை‌க் கை‌விட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அர‌சி‌ற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வே‌ண்டுகோ‌‌ள் ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையி‌ன் ‌விவர‌ம் வருமாறு:

ஏற்கனவே, பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் இவற்றின் விலைகளை உயர்த்தினால் மேலும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்.

தொழி‌ல் கொள்கை, கல்விக் கொள்கை, விவசாயக் கொள்கை போல தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எண்ணை‌க் கொள்கையும் இதுவரை வகுக்கப்படாதது பெரும் குறையே.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தடுக்க, இறக்குமதி வரி, சுங்கவரி இவற்றை குறைப்பதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை சிகரெட், பான்மசாலா, மதுபான வகைகள் போன்ற உடல் நலனுக்கு தீங்குவிளைவிக்கும் பொருட்களின்மீது வரியை அதிகப்படுத்தி சமன்செய்ய முடியுமா என்று ஆலோசிக்க வேண்டும்.

நமது நாட்டில் கங்கை, கோதாவரி படுகைக‌‌ளி‌ல் அபரிதமான எண்ணை வளம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய எண்ணை வளங்களை கண்டறிந்து, உள்நாட்டு எண்ணை உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தரிசு நிலங்களை மேம்படுத்தி காட்டாமணக்கு விளைச்சலை ஊக்குவித்து, பயோடீசல் உற்பத்தி செய்ய வேண்டும்.

இ‌வ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil