Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர். சேகர் – சென்னை மாநகர காவல் ஆணையர்!

Advertiesment
ஆர். சேகர் – சென்னை மாநகர காவல் ஆணையர்!
, சனி, 31 மே 2008 (16:03 IST)
சென்னை மாநகரின் காவல் ஆணையராக மூத்த காவல் அதிகாரி ஆர். சேகர் இன்று பொறுப்பேற்றார்.

TN.Gov.TNG
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த நாஞ்சில் குமரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த எளிய விழாவில் நாஞ்சில் குமரனிடமிருந்து ஆணையர் பொறுப்பை சேகர் ஏற்றார்.


ஆணையர் பொறுப்பேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர், சென்னையில் குற்றவாளிகள், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் மாநகரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் அதிகபட்ச தயார் நிலையில் செயல்படும் என்று கூறிய சேகர், காவல் துறையின் மீது மக்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறையேதுமிருந்தால் அதனைத் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

webdunia
webdunia photoTNG
சென்னை மாநகர காவல் இணை ஆணையராக நீண்ட காலமாக பணியாற்றிய சேகர், மாநகர போக்குவரத்து பொறுப்பேற்றிருந்தபோது பல மாற்றங்களைச் செய்து போக்குவரத்தை முறைபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையர் பொறுப்பேற்றவுடன் சேகரும், ஓய்வு பெறும் நாஞ்சில் குமரனும் தமிழக முதலமைச்சரை சந்தி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil