தமிழக விசைப்படகு மீனவர்கள் 45 நாள் தடைக்காலம் முடிந்து நாளை மீண்டும் கடலுக்கு செல்கிறார்கள். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் 31ஆம் தேதிதான் செல்கிறார்கள்.
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக விசைப்படகுகளுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல ஆண்டுதோறும் தடைவிதிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தடைக்காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 201 விசைப்படகு மீனவர்களும் 31ம் தேதி தான் கடலுக்கு செல்கிறார்கள்.
இதேபோல புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் 31ஆம் தேதி தான் செல்கின்றனர்.