நியாயவிலைக் கடையில் இருந்து அரிசியை கடத்த முயன்ற இரண்டு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் நேற்று இரவு இரண்டு பேர் மினி லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் லாரி டிரைவரிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறினார்.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக தாசில்தார் செல்வராஜிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து மின் லாரியை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இரண்டு பேரை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
இரண்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.