ஏற்காடு கோடை விழா இன்று தொடங்கியது. இந்த விழா மே 31ஆம் வரை நடைபெறுகிறது.
ஏற்காட்டில் 33-வது ஆண்டு கோடை விழா இன்று காலை தொடங்கியது. விழாவை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி வைத்தார். அரசு சாதனைகள் விளக்க கண்காட்சியை பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி, வெவ்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பிற துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட செய்தித்துறை செய்துள்ளது.
இன்று மாலை மலைவழி நடைப்பயணம் நடைபெறுகிறது. இதில் மாணவ- மாணவியர், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். மலர்க் கண்காட்சியையொட்டி, வெவ்வேறு வகையான மலர்களால் பல்வேறு வடிவங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
மலைப்பாதையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை விழா மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.