10ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன், ஓ.எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைந்தது.
இந்த தேர்வை 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்த மாத தொடக்கத்தில் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டன. வேலூர் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுபதாக கூறப்பட்டது.
ஆனால் திட்டமிட்டப்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. என்றாலும் தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்து மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.