அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார்.
தமிழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் இணை போக்குவரத்து ஆணையரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உண்ணாவிரத்திற்கு காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் காலை 6 மணிக்கே உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு வந்த டிராபிக்ராமசாமி திடீரென அங்கு அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
இதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். அதை மீறி உண்ணாவிரதம் இருந்த டிராபிக் ராமசாமியை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.