ரயில்வே காவலர்களுக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தலைமை ஆய்வாளர் உமாகணபதி சாஸ்திரி கூறினார்.
ரயில்வே காவல்துறை தலைமை ஆய்வாளர் உமாகணபதி சாஸ்திரி ஈரோடு ரயில்வே நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு ரயில் நிலையத்தில் முழுமையாக ஆய்வு செய்தேன். திருப்தியாக உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கவும் இந்த சம்பவங்களை தடுக்கவும் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
செல்போன் மூலம் தகவல் கொடுத்து கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே காவலர்கள் 100 பேருக்கு அடுத்த மாதம் முதல் தேதி முதல் சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறை காலங்களில் ரயிலில் ஏற்படும் நெரிசலை தடுக்க பத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 72 விழுக்காடு குற்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு 82 விழுக்காடு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார்.