மணல் குவாரியை அரசே தொடர்ந்து நடத்தும் என்ற முடிவு அ.இ.அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி பென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டத்தை அரசே தொடர்ந்து செயல்படுத்தும் என அறிவிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையா? புதிய முடிவு எடுப்பதாக இருந்தால் இத்தகைய கூட்டத்தைக் கூட்டலாம்.
துணை நகரத் திட்டம், குடியிருப்புகளுக்கு விநியோகிக்கும் குடிநீருக்கு மீட்டர் பொருத்தும் திட்டம் என அறிவித்த பல்வேறு திட்டங்களை எதிர்ப்புகள் கிளம்பியதும் தி.மு.க அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
அதுபோலவே, மணல் குவாரிகளை அரசே நடத்தும் என முடிவெடுத்துள்ளது. இம்முடிவு அ.இ.அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.