வானிலை குறித்து விவசாயிகள் தகவல் தெரிந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தானியங்கி வானிலை மையத்தை தேசிய வேளாண்மை திட்ட வளர்ச்சியும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இணைந்து அமைக்கிறது.
இந்த தானியங்கி வானிலை மையம் புதுக்கோட்டை, கந்தார்வகோட்டை, திருவரங்குளம், அன்னவாசல், அறந்தாங்கி ஆகிய இடங்களில் அமைக்கப்படுகிறது.
இந்த வானிலை மையத்தில் திரட்டப்படும் மழை அளவு, வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் அனைத்து தகவல்கள் உடனுக்குடன் புனேவில் உள்ள தேசிய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சென்றடையும்.