Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலை 11 ஆ‌‌‌ம் தேதி பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு: பொ‌ன்முடி!

ஜூலை 11 ஆ‌‌‌ம் தேதி பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு: பொ‌ன்முடி!
, சனி, 24 மே 2008 (15:01 IST)
ஜூலை 11ஆ‌‌மதே‌த‌ிக‌ளி‌லபொ‌றி‌‌யிய‌லபடி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வதொட‌ங்கு‌கிறதஎ‌ன்றஉய‌ரக‌ல்‌வி‌த்துறஅமைச்சர் பொன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று அமை‌ச்ச‌ர்க‌ள் பொ‌‌ன்முடி, எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்ன‌ீ‌ர் செ‌ல்வ‌ம் ஆ‌கியோ‌ர் கூ‌ட்டாக செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், பொ‌றி‌யிய‌லகல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 10ஆ‌மதேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ‌ர்க‌ளநல‌னகரு‌தி விண்ணப்பங்களை தாக்கல் செய்வற்கான தேதி மே 31ஆ‌மதேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூ‌ன் 20ஆ‌மதேதி அளிக்கப்படும். தர வரிசை பட்டியல் ‌ஜூ‌ன் 25ஆ‌‌மதேதி வெளியிடப்படும்.

பொ‌றி‌யிய‌லபட்டப்படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 3ஆ‌மதேதி நடைபெறும். தொழில் கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 4ஆ‌மதேதி முதல் 8ஆ‌மதேதி வரை நடைபெறும்.

அய‌லமாநில மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 9ஆ‌மதேதியும், உடல் ஊனமுற்றோருக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 10ஆ‌மதேதியு‌மநடைபெறும். பொதுப்பிரிவு பாடத்திற்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 11ஆ‌மதேதி முதல் ஆகஸ்ட் 31ஆ‌மதேதி வரை நடைபெறும்.

பொ‌றி‌யிய‌லகல‌ந்தா‌ய்வு சென்ற ஆண்டை போல அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதற்கு கடந்த ஆண்டை போல மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேரு‌ந்து கட்டண சலுகை வழங்கப்படும்.

மரு‌த்தபடி‌ப்பு‌க்கஜூ‌ன் 3ஆ‌மதே‌தி முத‌ல் ‌வி‌ண்ண‌ப்ப‌ம்!

மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்ப படிவம் ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூ‌ர்‌த்‌தி செ‌ய்து கொ‌டு‌க்க‌க்கூடிய கடைசி நாள் ஜூன் 17ஆ‌ம் தேதி ஆகும். ரேண்டம் எண் ஜூன் 18ஆ‌ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் 28ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

மருத்துவ பட்டப்படிப்புக்கான முதல் கட்ட கல‌ந்தா‌ய்வு ஜூலை 4ஆ‌ம் தேதி முதல் 11ஆ‌ம் தேதி வரை நடைபெறும். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கடைசி நாள் ஜூலை 21ஆ‌ம் தேதி ஆகும். ஆகஸ்டு 4ஆ‌ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

2-வது கட்ட மருத்துவ கல‌ந்தா‌ய்வு ஆகஸ்டு 28ஆ‌ம் தேதி நடைபெறும். ஆகஸ்டு 30ஆ‌ம் தேதி தேர்வு பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். செப்டம்பர் 30ஆ‌ம் தேதியுடன் அனைத்து மருத்துவ சேர்க்கையும் முடிவடையும்.

இதற்கு கடந்த ஆண்டை போல மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு‌க்கு வரு‌ம் மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேரு‌‌ந்து கட்டண சலுகை வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil