மே 26ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர் கூட்டம் என்ற கண்துடைப்பு நாடகத்தில் ம.தி.மு.க கலந்துகொள்ளாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மணல் கொள்ளையால் தமிழக மக்களின் ஆத்திரத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகிவிட்ட தி.மு.க அரசு மக்களை திசை திருப்புவதற்காக இனி மணல் விற்பனையை மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் ஓப்பன் டெண்டர் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 26ஆம் தேதி சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி ஏற்பாடு செய்திருக்கிறார். தமிழ்நாட்டு வாழ்வாதார உரிமைகளை காக்க தவறி சொந்த அரசியல் லாபத்திற்காக அவற்றை காவு கொடுத்து வரும் மக்கள் விரோத தி.மு.க அரசுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டுவதுதான் ம.தி.மு.க.வின் அணுகுமுறையாகும்.
எனவே 26ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கட்சித்தலைவர் கூட்டம் என்ற கண்துடைப்பு நாடகத்தில் ம.தி.மு.க கலந்துகொள்ளாது என்று வைகோ கூறியுள்ளார்.