திருச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சாராய வேட்டையில் 163 சாராய வியாபாரிகளை கைது செய்தனர். இதில் 54 பேர் பெண்கள் ஆவர்.
தமிழகம், கர்நாடகத்தில் விஷ சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி கள்ளச்சாராய வேட்டையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 145 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பேர் பெண்கள் ஆவர். அவர்களிடம் இருந்து 2,855 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 600 லிட்டர் பாக்கெட் சாராயம் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் கிராமப்புற எல்லைக்குட்பட்ட 28 காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.