மணல் குவாரிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் அக்கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மணல் குவாரிகளை தனியார் மயமாக்கினால் அதன் விலை அதிகரிப்பதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தற்போது ஒரு லோடு மணல் ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மயமானால் ஒரு லோடு மணல் ரூ.3000 ஆக உயர வாய்ப்புள்ளது.
மணல் குவாரிகளை கட்டுப்படுத்தி வரும் தமிழக அரசு, தனியார் மயமாக்கினால் அதனை கட்டுப்படுத்த அரசுக்கு பெரும் கஷ்டமாக இருக்கும். மணல் குவாரியில் ஏற்படும் பிரச்சனையை தற்போது அரசிடம் தெரிவித்து சரிபடுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியார் மயமானால் அவற்றில் ஏற்படும் பிரச்சனையை அரசிடம் தெரிவிக்க முடியாது.
காவிரி நீர் பிரச்சனையில் விவசாயிகளை அழைத்து பேசும் தமிழக அரசு, மணல் விற்பனை பற்றி ஆலோசிக்க தமிழக அரசு மே 26ஆம் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்களையும் அழைக்கவேண்டும் என்று கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.