பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில கல்வித்திட்டத்தில் படிக்கிற மாணவர்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் 21ஆம் தேதி அன்று தான் வழங்கப்பட்டதாலும், மத்திய கல்வித்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவு 21ஆம் தேதி தான் வெளியிடப்பட்டதாலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பொறியியல் கல்வி விண்ணப்பங்கள் வினியோகிப்பதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு மே 31ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.