கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் கள்ளச்சாராயத்தை காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்ததே ஓசூர் கள்ளச்சாராய சாவுக்குக் காரணம் என பா.ம.க தலைவர் கோ.க.மணி குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து ஜீப் மூலம் தமிழகப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவில்லை.
இதுகுறித்து, ஊர் பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையங்களில் புகார் செய்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இறந்தவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மற்ற நிகழ்வோடு ஒப்பிடாமல், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உரிய உதவித் தொகையை அரசு வழங்கவேண்டும். இந்த சோக நிகழ்வு முழு மதுவிலக்கு வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது என்று கோ.க.மணி கூறியுள்ளார்.