அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியசையொட்டியே இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடி மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திருத்தணி, தஞ்சாவூர், திருவையாறு, மாயனூர், கொடைக்கானல், திருப்பூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.