Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ந‌ரி‌க்குறவ‌ர் நலவா‌ரிய‌ம் அமை‌ப்பு: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

ந‌ரி‌க்குறவ‌ர் நலவா‌ரிய‌ம் அமை‌ப்பு: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!
, வியாழன், 22 மே 2008 (16:05 IST)
நரிக்குறவர் சமுதாய நலன்கள் காத்திதமி‌ழ்நாடு நரிக்குறவர்கள் நலவாரியம் அமை‌த்து அத‌‌ற்கு தலைவ‌ர், உறு‌‌ப்‌பின‌ர்களை ‌நி‌ய‌மி‌‌த்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழக சட்டப்பேரவையில் இ‌ந்தா‌ண்டு நிதிநிலை அறிக்கையில் அ‌றி‌வி‌க்‌க‌ப்‌ப‌ட்டதை தொட‌‌ர்‌ந்து ''தமி‌ழ்நாடு நரிக்குறவர்கள் நலவாரியம்” என்னும் புதிய அமைப்பினை உருவாக்கி, அதன் தலைவராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரு‌ம், உறுப்பினர்-செயலராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரும்,

அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக, நிதித்துறைச் செயலாளர், வருவா‌ய்த்துறை செயலாளர், சமூகநலத்துறை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவா‌ய்ப்புத் துறைச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் ஆகியோ‌ர் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக, விழுப்புரம் மா.சங்கர், வடலூர் ஏ.கே.பாபு, சென்னை பி.எம்.ஜே.ராஜ்குமார், பெரம்பலூர் ஆர்.சிவகுமார், புதுக்கோட்டை எஸ்.இராஜேந்திரன், திருச்சி எஸ்.ஜீவா, கடலூர் எம்.பாண்டியன், கோவை டி.சேகர், சேலம் எஸ்.ரவிச்சந்திரன், திருவண்ணாமலை என்.காசியம்மாள் ஆகியோரை நியமனம் செ‌ய்து முதலமைச்சர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil