எல்லையை மீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை சிறிலங்கா நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மே 5 ஆம் தேதி தலைமன்னார் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த நான்கு நாட்டு பகுதிகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர்களை அவர்களை சிறிலங்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களை சிறிலங்கா நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.