அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் மாயனூரிலும், திண்டுக்கல் மாவட்டம் சத்திரபதியிலும் 4 செ.மீ மழை பெய்துள்ளது.
மதுரையில் 3 செ.மீட்டரும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2 செ.மீட்டரும், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் ஒரு செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னையில் மாலையோ அல்லது இரவோ மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியசையொட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.