Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்: அ‌ன்பழக‌ன்!

முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்: அ‌ன்பழக‌ன்!
, செவ்வாய், 20 மே 2008 (16:27 IST)
webdunia photoFILE
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தி.ு.க தொண்டர்களுக்கு அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதகு‌றி‌த்தி.ு.க பொதுச் செயலாளர், அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 3ம் தேதி, முதல்வரின் 85வது பிறந்த நாளை நாம் பேரார்வத்துடன் கொண்டாடப் போகிறோம்.

இயக்கத்தின் இதயத் துடிப்பின் அடையாளமான அவரது பிறந்தநாள் விழாவை பேரார்வத்துடன் கொண்டாடுமாறு தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

உட்கட்சி தேர்தல்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் நடத்தி வரும் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு திமுக என்பதை நாடறியும். அப்படிப்பட்ட கட்சியின் சட்டதிட்டப்படியான கடமையை நிறைவேற்றிட ஏதுவாக, ஜூன் 2ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் முதல்வர் தலைமையில் சென்னையில் நடக்கிறது.

அவரது மனக்கவலைக்கு மாற்று மருந்தாக மகிழ்ச்சிப் பெருக்கால் மலர்ந்த முகத்தோடும், பல்லாண்டு வாழ வாழ்த்தும் நெஞ்சோடும் கட்சியின் தொண்டர்கள், மகளிர் அனைவரும் திரண்டு வந்து, முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளை இந்த நாடே வியக்கும் வண்ணம் கொண்டாடுவோம்.

அந்த விழாவைச் சிறப்பாக கொண்டாடும் பணிகளில் கட்சியின் அமைப்புகள் அனைத்தும், இன்று முதலே ஈடுபட்டு விரைந்து செயல்பட வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ன்பழக‌னகேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil