சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்கூலி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்கூலியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் நியமித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்கூலி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.