மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கழுத்துவலி, முதுகுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி, பொன்முடி, எ.வ.வேலு, சுப.தங்கவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பா.ஜ.க தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.